News March 16, 2025
ராகுல் அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 3 மாதங்களில் 2ஆவது முறையாக அவர் வியட்நாம் செல்வதாகவும், புத்தாண்டு கொண்டாட சென்ற ராகுல் அங்கு 22 நாள்கள் இருந்ததாகவும் விமர்சித்துள்ளார். தனது தொகுதிக்கு கூட செல்லாமல் ராகுல் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து செல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News March 16, 2025
ஐந்து நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை

தமிழக வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாள்கள் விடுமுறை என்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஏப்ரல் 1 – அக்கவுண்ட் க்ளோஸிங் விடுமுறை, ஏப்ரல் 14 – அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை, ஏப்ரல் 18 – புனித வெள்ளி விடுமுறை, ஏப்ரல் 12, 26 – இரண்டாம் & நான்காம் சனி விடுமுறை என 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல வங்கிகள் செயல்படாது.
News March 16, 2025
Rewind: சச்சின் சதத்தில் சதமடித்த நாள் இன்று!

மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அசைக்க முடியாத சாதனையை படைத்த நாள் இன்று (மார்ச் 16). 2012ம் ஆண்டு இதேநாளில், ஆசியக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை அவர் பதிவு செய்தார். 13 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் இந்த சாதனையை யார் தகர்ப்பார் என நினைக்கிறீர்கள்?
News March 16, 2025
பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிமுக மூத்த தலைவர்களே செங்கோட்டையனின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தபோதும், தான் சரியான பாதையில் செல்கிறேன் என செங்கோட்டையன் கூறி இருந்தார். இந்நிலையில், இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி என பாராட்டியுள்ள அவர், கொரோனா காலத்தில் அனைவரும் இலவச தடுப்பூசி போட்ட வரலாறு நம் மண்ணில் இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஒருவேள இருக்குமோ?