News March 16, 2025

திண்டுக்கல் மாவட்ட வழங்கல் துறை அறிவிப்பு

image

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை மார்ச் 31க்குள் சரிபார்த்து KYC முடிக்க வேண்டும், என திண்டுக்கல் மாவட்ட வழங்குத்துறை இன்று அறிவித்துள்ளது, மேலும் குடும்பத்தினர் அனைவரும்KYC, செய்யத் தவறினால் அவர்களுக்கு ரேஷன் பொருள் வழங்குவது நிறுத்தப்படலாம்,மேலும் அவர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Similar News

News August 5, 2025

திண்டுக்கல்லில் இன்று மின் தடை! CLICK NOW

image

திண்டுக்கல்: காந்திகிராமம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பிள்ளையார்நத்தம், பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வெள்ளோடு, கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, அன்னை நகர், சரவணா மில், சீவல்சரகு, வல்க்கம்பட்டி, கும்மம்பட்டி, மக்கேல் பட்டி, அனுமந்தராயன் கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே SHARE

News August 5, 2025

திண்டுக்கல்லில் கைத்தறி கண்காட்சி ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல்லில் தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை திண்டுக்கல் மாநகர் பாரதிபுரம் அருட்பெருஞ்ஜோதி எஸ்எஸ்கே(SSK) விஜயலட்சுமி மஹாலில் 07.08.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கைத்தறி கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 4, 2025

தமிழ் செம்மல் விருது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2025-ம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு www.tamilvalarchiturai.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் தொலைபேசி எண் 0451-2461585 என்ற முகவரிக்கு நேரில் (அ) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்துக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவிப்பு.

error: Content is protected !!