News March 16, 2025
அதிகாலையில் கோர விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி பலி

விழுப்புரத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. செஞ்சியை அடுத்த வல்லம் தொண்டி ஆறு அருகே, இன்று அதிகாலை பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து உடனே எந்த தகவலும் வெளியாகவில்லை.
Similar News
News March 18, 2025
புதினிடம் வலியுறுத்திய PM மோடி

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினை, PM மோடி வலியுறுத்தியதாக போலந்து வெளியுறவு அமைச்சர் டோபில் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக PM மோடியை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News March 18, 2025
மார்ச் 18: வரலாற்றில் இன்று!

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)
News March 18, 2025
வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.