News March 16, 2025

தீர்த்தமலையின் சிறப்புகள் !!

image

அருள்மிகு தீர்த்த கிரீஸ்வரர் திருக்கோவில், இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம், வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது, இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற மலை தீர்த்தமலை ஆகும். இம்மலை இன்றளவும் சுற்றுலா பயணிகளை வியப்படைய வைக்கும் ஓர் அற்புத தளமாகவே உள்ளது.

Similar News

News August 20, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக J. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி‌ புவனேஸ்வரி, அரூர் கிருஷ்ண லீலா, பென்னாகரம் இளவரசி மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்

News August 20, 2025

தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள்

image

வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். விழாவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

News August 20, 2025

தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தருமபுரியில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. தருமபுரியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபம், கடத்தூரில் உள்ள மீனாட்சி மஹால், பென்னாகரத்தில் உள்ள பிக்கிலி 4 சாலை திறந்தவெளி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தடங்கம், பாலக்கோடு விபிஆர்சி கட்டிடம் கமலாம் பட்டி மற்றும் அரூரில் உள்ள அண்ணமார் திருமண மண்டபம் ஆகிய ஆறு இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஷேர்!

error: Content is protected !!