News March 16, 2025
ஹேங் ஓவரில் இருந்து விடுபட இதை ட்ரை பண்ணுங்க

இரவில் மது அருந்திய ‘மப்பு’ தீரலையா? காலையில் எழுந்ததும் தாகம் தீரும் அளவிற்கு தண்ணீர் குடித்தால், நீர்ச்சத்து உயர்ந்து மந்தம் குறையும் *மிட்டாய் சுவைக்கலாம், கஃபைன் இல்லாத சோடா குடிக்கலாம் *மிளகு டீ, இஞ்சி டீ, கிரீன் டீ அருந்தினால் தலைவலி குறையும், மந்தமான நிலை மாறும் *பசித்தாலும் அதிகம் சாப்பிட வேண்டாம். *வாழைப்பழம், பிஸ்கட், வெண்ணெய் தடவிய ரொட்டி சாப்பிடலாம் *மீண்டும் மது குடிக்காதீர்.
Similar News
News March 16, 2025
மது அருந்துவதில் இப்படி ஒரு பாசிடிவ் விஷயமா?

மதுவால் BP, கல்லீரல், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் என ஏராளமான நோய்கள் வரும். ஆனால், மது அருந்துவதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் (LDL) குறைந்து, நல்ல கொலஸ்டிரால் (HDL) அதிகரிக்கிறது என்கிறது ஹார்வர்ட் ஆய்வுமுடிவு. ‘அப்ப குடிக்கலாமா?’ என்று கேட்டால், ‘நல்லது, கெட்டதை ஒப்பிட்டால் குடியை விடமுடியாதவர்கள் அளவாக குடிக்கலாம். பழக்கம் இல்லாதவர்கள் குடிக்காமல் இருப்பதே நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
News March 16, 2025
ஐந்து நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை

தமிழக வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாள்கள் விடுமுறை என்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஏப்ரல் 1 – அக்கவுண்ட் க்ளோஸிங் விடுமுறை, ஏப்ரல் 14 – அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை, ஏப்ரல் 18 – புனித வெள்ளி விடுமுறை, ஏப்ரல் 12, 26 – இரண்டாம் & நான்காம் சனி விடுமுறை என 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல வங்கிகள் செயல்படாது.
News March 16, 2025
Rewind: சச்சின் சதத்தில் சதமடித்த நாள் இன்று!

மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அசைக்க முடியாத சாதனையை படைத்த நாள் இன்று (மார்ச் 16). 2012ம் ஆண்டு இதேநாளில், ஆசியக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை அவர் பதிவு செய்தார். 13 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் இந்த சாதனையை யார் தகர்ப்பார் என நினைக்கிறீர்கள்?