News April 1, 2024
‘G.O.A.T’ படத்தின் டீசர் எப்போது?

வெங்கட் பிரபு இயக்கி வரும் G.O.A.T. படத்தின் டீசரை, நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று (ஜூன் 22) வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் படக்குழு ரஷ்யா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 16, 2025
பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்: CM ஸ்டாலின்

தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாக கவர்னர் R.N.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் குற்றங்கள் மற்றும் குற்றச்செயல்கள் குறைந்து வருவதுடன், பெண்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 16, 2025
ராஜஸ்தான் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம்

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் Pre-KG, LKG, UKG வகுப்புகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாம். இதற்கு NCERT மற்றும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இது நடைமுறைக்கு வரும். உங்கள் கருத்து என்ன?
News August 16, 2025
ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் காலமானார்

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் (62) உடல்நலக்குறைவால் காலமானார். ஆக.2 ஆம் தேதி குளியலறையில் விழுந்ததால் சோரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவரின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.