News March 16, 2025

தண்டவாளத்தில் வீசப்பட் தொழிலாளி உடல்

image

சூளகிரியை சேர்ந்தவர் லோகநாதன், கடந்த மாதம் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை என தாய் மணிமேகலை புகார்படி, சூளகிரி போலீசார் தேடினர். இந்நிலையில், கர்நாடகா மாநில ரயில்வே போலீசார், சில நாட்களுக்கு முன், தண்டவாளத்தில், வாலிபர் சடலம் கிடப்பது குறித்து விசாரித்தனர். இந்நிலையில் அது லோகநாதன் என தெரிந்தது. அவரை மர்ம கும்பல் கொலை செய்து சடலத்தை வீசி சென்றிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Similar News

News March 16, 2025

கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய 7 சிறந்த இடங்கள்

image

கிருஷ்ணகிரியில் பார்க்க வேண்டிய 7 முக்கிய இடங்களை இங்கு காண்போம். 1. கிருஷ்ணகிரி கோட்டை 2. போக நந்தீஸ்வரர் கோயில் 3. கோட்டை மாரியம்மன் கோயில் 4. காளீஸ்வரர் கோயில் 5. தளி 6. சூலகிரி 7. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம். இதை தவிர்த்து வேறு சில இடங்கள் எதுவும் இருந்தா கமெண்ட் பண்ணிட்டு மறக்காம ஷேர் பண்ணிருங்க

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னையைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 16, 2025

இன்டா்ன்ஷிப் பயிற்சி விண்ணப்பிக்க கால அவகாசம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு 16 நிறுவனங்கள் சுமாா் 1,536 இளைஞா்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐடிஐ படித்த 21 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் மாா்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!