News March 16, 2025
WPL: இவர்களுக்கே ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருது

WPL பைனலில் DC அணியை வீழ்த்தி, MI அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த MI அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார். அத்துடன், இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த MI அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார். மேலும், நாட் சீவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.
Similar News
News March 17, 2025
த்ரில்லர் படம் இயக்குவதே கனவு.. பிரபல நடிகையின் ஆசை

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். தற்போது OTT-யில் வெளியாகியுள்ள சுழல் வெப் தொடரின் 2ஆம் பாகத்தில் இவர் நடித்துள்ளார். இதனிடையே பேட்டி ஒன்றில் தனக்கு த்ரில்லர் படம் இயக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார். தன்னால் திரைக்கதை எழுத முடியாவிட்டாலும், எழுத்தாளர் எழுதும் கதையைத் திரையில் கொண்டு வர முடியும் எனக் கூறியுள்ளார்.
News March 17, 2025
சட்டப்பேரவையில் EPS, செங்கோட்டையன் பேச்சு

கடந்த சில நாள்களாக EPSஐ சந்திப்பதை தவிர்த்துவந்த செங்கோட்டையன், இன்று சட்டப்பேரவையில் அவருடன் பேசினார். டிவிஷன் வாரியான வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதன் விதிகள் புரியாமல் அதிமுகவினர் அமளியில் ஈடுபட, அதனை செங்கோட்டையன் EPSக்கு தெளிவாக புரிய வைத்தார். பின்னர், பேரவைக்கு வெளியே பேட்டி கொடுத்த EPS, தனக்கும் செங்கோட்டையனுக்கும் எந்தவித மோதலும் இல்லை என்று கூறினார்.
News March 17, 2025
அதிக நேரம் ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் யார் தெரியுமா?

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.