News March 16, 2025
இதென்ன சோதனை… டயரின்றி தரையிறங்கிய விமானம்!

பாகிஸ்தானில் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. லாகூர் விமான நிலையத்தில் சரியான முறையில் தரையிறங்கிய விமானத்தின் பின்பக்க சக்கரங்களில் ஒன்று மாயமாகி இருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். நடுவானில் சக்கரம் கழன்று விழுந்ததா? அல்லது புறப்படும்போதே சக்கரம் இல்லாமல் இருந்ததா? என விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 16, 2025
வரும் 19ஆம் தேதி ஆட்டோக்கள் ஸ்டிரைக்!

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி வரும் 19ல் ஸ்டிரைக் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி டிரைவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டும் என அந்த கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கால் டாக்சி APPகளை கட்டுப்படுத்த அரசே ஒரு ஆட்டோ APPஐ தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
News March 16, 2025
ஏ.ஆர்.ரகுமானுக்கு நெஞ்சு வலி

ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 16, 2025
தமிழ் மொழியை புகழ்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

தமிழ் இனிமையான மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். சென்னை அருகே பண்ணூரில் பேசிய அவர், மொழியை வைத்து பாஜக அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார். தமிழ் மொழி வரலாற்று தொன்மை உடையது என்பதை ஏற்பதாகவும், உலக சொத்துக்களில் ஒன்றாக தமிழ் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.