News March 16, 2025

WPL கோப்பையை வென்றது மும்பை

image

பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை அணி WPL பட்டம் வென்றது. டெல்லி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 ஆண்டு லீக் வரலாற்றில் 2வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. மும்பை நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நிகி பிரசாத் (25*) போராடியும் பலன் கிடைக்கவில்லை. ஏற்கெனவே, 2023ல் மும்பை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 16, 2025

பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: மெக்வால்

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அறிமுகப்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் மெக்வால் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது, அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 1952, 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற, சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 16, 2025

Hat-trick தோல்வி.. தொடரும் DC-யின் சோகக்கதை

image

WPL-லின் முதல் சீசனிலிருந்தே சிறப்பாக விளையாடி வரும் டெல்லி அணி இறுதி போட்டியில் மட்டும் ஏனோ சொதப்பிவிடுகிறது. 2023ல் மும்பை அணியிடமும், 2024ல் பெங்களூருவிடமும் கோப்பையை பறிகொடுத்த டெல்லி, நேற்று மீண்டும் மும்பையிடம் வீழ்ந்தது. IPL-லில் தான் டெல்லி அணியால் சாம்பியன் ஆக முடியவில்லை என்றால் WPL-லிலும் அதே சோகம் தொடர்கிறது. DC-யின் புதிய கேப்டன் அக்‌ஷர் பட்டேல் கோப்பையை வெல்வாரா?

News March 16, 2025

அதிகாலையில் கோர விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி பலி

image

விழுப்புரத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. செஞ்சியை அடுத்த வல்லம் தொண்டி ஆறு அருகே, இன்று அதிகாலை பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து உடனே எந்த தகவலும் வெளியாகவில்லை.

error: Content is protected !!