News March 16, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (மார்ச்-15) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி பெண் பலி

தென்காசி முதலியார் தெருவை சேர்ந்தவர் குருநாதன் (60). இவரது மனைவி தும்பி அம்பாள் (55). சங்கரன் கோவில் – நெல்லை சாலையில் நவ நீதகிருஷ்ணாபுரம் விலக்கு அருகே தும்பி அம்பாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் தும்பியம்மாள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 70 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 36 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 69 அடி. கருப்பாநதி அணை நீர் இருப்பு 65 அடி. குண்டாறு அணை நீர் இருப்பு 36 அடி. இந்த அணைக்கு வரும் 18 கான அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 127 அடியாக உள்ளது.
News July 7, 2025
தென்காசியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT