News April 1, 2024
ஒரே ஓவரில் 20 ரன்கள்… தோனி அசத்தல்

டெல்லிக்கு எதிரான 13ஆவது ஐபிஎல் போட்டியில், தோனி அதிரடி காட்டியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பேட்டிங் செய்த அவர், 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என விளாசி அசத்தினார். குறிப்பாக, கடைசி (20ஆவது) ஓவரில், 4 6 0 4 0 6 என மொத்தமாக 20 ரன்கள் குவித்து மைதானத்தையே அதிர வைத்தார். இருப்பினும், குறித்த பந்துகளில் இலக்கை எட்ட முடியாமல், சென்னை அணி தோல்வி அடைந்தது. இது சென்னை அணியின் முதல் தோல்வி ஆகும்.
Similar News
News October 30, 2025
தமிழகத்தில் மேலும் ஒரு செஸ் கிராண்ட்மாஸ்டர்!

சென்னையை சேர்ந்த 16 வயதான இளம்பரிதி புதிய செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டியலில் இணைந்துள்ளார். FIDE ரேட்டிங்கில் 2500 புள்ளிகள், கிராண்ட்மாஸ்டராகும் 3 விதிகளை அவர் பூர்த்தி செய்ததால் TN-ன் 35-வது, இந்தியாவின் 90-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார். இவர் செஸ் ஜாம்பவான் விஸ்வநாத் ஆனந்த் அகாடமியில் பயிற்சி பெறுவது குறிப்பிடத்தக்கது. இளம்பரிதிக்கு DCM உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

அதிமுக Ex கோவை மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரும், Ex மாநகராட்சி கவுன்சிலருமான சொக்கம்புதூர் செந்தில் திமுகவில் இணைந்தார். கோவையில், Ex அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் செந்திலின் ஆதரவாளர்கள் சிலரும் திமுகவில் இணைந்தனர். அதிமுகவின் கோட்டையாக உள்ள கோவையில், 2026 தேர்தலில் கணிசமாக வெற்றியை பதிவு செய்ய, அக்கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை திமுகவில் சேர்க்கும் படலம் தொடர்ந்து வருகிறது.
News October 30, 2025
தூங்கும் முன்பாக செய்யக்கூடாத 5 தவறுகள்

நாள் முழுவதும் அயராது உழைத்த பிறகு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் அவசியமானது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், தூங்க செல்லும் முன்பாக சில தவறுகளை செய்வதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுகிறது. தூங்க செல்லும் முன்பாக செய்யக்கூடாத 5 முக்கிய தவறுகளை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்த்து நண்பர்களுக்கும் தவறாமல் பகிரவும்.


