News March 15, 2025
சிறுவயதில் பாலியல் தொந்தரவு.. நடிகர் வேதனை

ஹாலிவுட் நடிகர் ஜோனாதன் மேஜர்ஸ், 9 வயது சிறுவனாக இருந்தபோது பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். பத்திரிகை பேட்டியில் கசப்பான நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார். அதில், ஆண்களும் பெண்களும் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தந்தை இல்லாததால் கவனிப்பதாக கூறி, இதை அவர்கள் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆன்ட்மேன் அன்ட் தி வாஸ்ப், க்ரீட் 3 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
Similar News
News March 16, 2025
இடியாப்ப சிக்கலில் அதிமுக

அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டுவர இபிஎஸ், ஒபிஎஸ் தரப்பு கோர்ட்டுகளில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், இபிஎஸ், செங்கோட்டையன் இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. 2026 தேர்தல் பணியை அதிமுக தொடங்க இருக்கும் வேளையில், இடியாப்ப சிக்கலாய் அதிகரித்து வரும் பிரச்னை அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
News March 16, 2025
துரோகம், விரோதம்… பாக். மீது மோடி பாய்ச்சல்

நல்லெண்ணத்துடன் பாகிஸ்தானுடன் அமைதிக்கான முயற்சியை இந்தியா எடுத்த போதெல்லாம் துரோகம், விரோதமே மிஞ்சியதாக PM மோடி விமர்சித்துள்ளார். பாக்.உடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பியே, 2014இல் தமது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அப்போதைய பாக். PM நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு ஞானம் வந்து அமைதிப் பாதைக்கு திரும்பும் என இந்தியா நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 16, 2025
லெஜண்ட்ஸ் லீக் ஃபைனல்: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் தொடரின் ஃபைனலில், சச்சின் தலைமையிலான இந்தியாவும், லாராவின் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், சிம்மோன்ஸ் 57 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 148 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சேஸ் செய்து கோப்பையை வெல்லுமா? கமெண்ட்டில் சொல்லுங்க.