News March 15, 2025
சபாநாயகரை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக EX அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இபிஎஸ்சுடன் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் நடந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தொகுதி பிரச்னை தொடர்பாக அப்பாவுவை சந்தித்ததாகவும், சபாநாயகரை எம்எல்ஏக்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றார்.
Similar News
News July 5, 2025
இறுதி போட்டிக்கு முன்னேறிய திண்டுக்கல்

TNPL குவாலிபையர் 2-ல் திண்டுக்கலுக்கு எதிராக முதலில் விளையாடிய சேப்பாக் 178 ரன்களை சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் கேப்டன் அபராஜித்(67), ஜெகதீசன்(81) சிறப்பாக விளையாடி அணியை நல்ல ஸ்கோர் எட்ட உதவினர். தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல்லில், பாபா இந்திரஜித், விமல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். திண்டுக்கல் – திருப்பூர் பைனலில் மோத உள்ளன.
News July 5, 2025
மகளிர் உரிமை தொகை பெற ஜுலை 15யில் விண்ணப்பம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி பெண்கள் முதல்கட்டமாக பயனடைந்தனர். மேல்முறையீடு மூலம் 1.48 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில்
இத்திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15ம் தேதி முதல் ‘மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்’ முகாம்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News July 5, 2025
பிரபல நடிகர் மைக்கேல் மேட்சென் காலமானார்

‘Kill Bill’, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(67) காலமானார். நேற்று மாரடைப்பு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மேலாளர் லிஸ் ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். #RIP