News April 1, 2024
இருசக்கர வாகனங்கள் விற்பனை 13% அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் இருசக்கர வாகனங்களின் விற்பனை, கொரோனாவுக்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து தேவை அதிகரிப்பால், 2023-24ஆம் ஆண்டில் 1.84 முதல் 1.85 கோடி இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது தவிர, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை 95 லட்சத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News January 18, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

₹2,000 உரிமைத் தொகை, ஆண்களுக்கும் இலவச பஸ் என அதிமுக அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்நிலையில், NDA மட்டுமல்லாது, தவெகவுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்க திமுக தயாராகி வருகிறதாம். இதன் ஒரு பகுதியாக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தவும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 18, 2026
SIR-ல் கேரளா தலைமை தேர்தல் அதிகாரி பெயரே மிஸ்ஸிங்!

SIR வரைவு வாக்காளர் பட்டியலில் கேரளா தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் விடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டில் அவர் பெங்களூருவில் இருந்ததால் அவர் பெயர் தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து வாக்காளர் சேர்ப்பு முகாமில் தனக்கும், தனது மனைவி & மகனுக்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவர் விண்ணப்பித்துள்ளார்.
News January 18, 2026
திமுக – காங்., ஒருவரை ஒருவர் முடித்துக்கொள்வர்: தமிழிசை

திமுக- காங்., இடையே நம்பிக்கையில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அவர்களிடையே கூட்டணி தொடருமா என்பதை சொல்ல முடியவில்லை என்ற அவர், 1967-ல் காங்கிரஸை திமுக முடித்தது; இப்போது ஒருவரை ஒருவர் முடித்துக் கொள்வார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அநீதியும் முடிந்துபோகும், மிகவும் மோசமான ஆட்சியும் முடிந்துபோகும். 2026 NDA கூட்டணிக்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.


