News March 15, 2025
முதல்வர் ஸ்டாலின் சிறை செல்வார்: தம்பிதுரை

மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் போல முதல்வர் ஸ்டாலினும் சிறைக்கு செல்வார் என்று அதிமுக MP தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான முறைகேடு வழக்கில்தான் அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது, தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்திருக்கும் நிலையில், தம்பிதுரை இவ்வாறு பேசியுள்ளார்.
Similar News
News July 4, 2025
வழுக்கை தலையா… இனி கவலை வேண்டாம்

வழுக்கைக்கு விரைவில் தீர்வு காணலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். வழுக்கை ஏற்பட, ஹேர் ஃபாலிக்கில்கள் வளர (அ) அழிய TGF-beta என்ற புரதம் தான் காரணம் என்பதை கண்டறிந்துள்ளனர். புதிய முடி வளர்வதற்கு இந்த புரதம் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். அதுவே, அளவை தாண்டினால், முடிகள் இறப்பை தூண்டி வழுக்கையை ஏற்படுத்துகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வழியை கண்டறிந்தால், வழுக்கையில் இருந்து விடுதலை நிச்சயம்.
News July 4, 2025
நடிகர், நடிகைகளுக்கு போதை சப்ளை: பரபரப்பு வாக்குமூலம்

போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தது தொடர்பாக கைதான கெவின், போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் கானாவை சேர்ந்த ஜான் தான், கொக்கைன் சப்ளை செய்து வந்ததாகவும், அவரின் வலதுகரமான பிரதீப்பிடம் கேட்டால் பிரசாத் மூலம் கொக்கைனை அனுப்புவார் என்று தெரிவித்தார். மேலும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வாயிலாக, நடிகர், நடிகைகளுக்கு தானும், பிரசாத்தும் கொக்கைன் சப்ளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News July 4, 2025
இதை செய்யாதீங்க… மருத்துவர்கள் எச்சரிக்கை

ஆபாசப் படம் பார்த்தால் தாம்பத்ய உறவில் திருப்தி குறைவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதிகநேரம் ஆபாசப் படம் பார்க்கும் ஆண்களுக்கு உடலுறவு செயல்பாடு பாதிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இவர்கள் படங்களில் வரும் உண்மைக்கு மாறான காட்சிகளை தொடர்ந்து பார்ப்பதால், இயல்பான திறன் குறைவதுடன், அப்படங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆண்களே அலர்ட்!