News March 15, 2025
கனிமொழி விமர்சனம்: சீறிய பவன் கல்யாண்

தான் இந்தி மொழியை ஒருபோதும் எதிர்த்ததில்லை; இந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்திருக்கிறேன் என ஆந்திரா DY CM <<15769285>>பவன் கல்யாண்<<>> தெரிவித்துள்ளார். மேலும், NEP இந்தியை திணிக்கவில்லை எனக் கூறிய அவர், தான் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக, பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன்பு GO BACK HINDI என பவன் கல்யாண் பதிவிட்டிருந்ததை கனிமொழி இன்று பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 4, 2025
300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்த ஆகாஷ் தீப்

கடப்பாரை பேட்டிங்னா இங்கிலாந்துதான் என்பதை நிரூபிப்பது போல் 2-வது டெஸ்டில் ஹேரி புரூக்கும்(158), ஜேமி ஸ்மித்தும்(184) விளையாடினர். 100/5 என்று இருந்த இங்கிலாந்து அணியை இருவரும் சதம் அடித்து, சரிவில் இருந்து மீட்டனர். இந்த பார்ட்னர்ஷிப் 300 ரன்களை கடந்து இந்தியாவுக்கு தலைவலியாக மாறியது. இந்நிலையில் ஆகாஷ் தீப் ஹேரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு நிம்மதி அளித்தார்.
News July 4, 2025
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…

மழை சீசனில் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம். இந்நிலையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உணவுகள் உதவும்: *சீசன் பழங்கள்: ஆப்பிள், நாவல், லிச்சி, பப்பாளி, பேரிக்காய், மாதுளை *தயிர், மோர் -அளவுடன் பகலில் மட்டும் *சுண்டைக்காய், வேப்ப விதைகள், மூலிகை டீ போன்ற கசப்பு உணவுகள் *வேகவைத்த காய்கறிகள் *கொய்யா, ஆரஞ்சு (வைட்டமின் சி பழங்கள்) *இஞ்சி, பூண்டு *மத்தி மீன், இறால், நட்ஸ், அவகாடோ உள்ளிட்டவை.
News July 4, 2025
ஜூலை 7-ம் தேதி அரசு விடுமுறை இல்லை

மொஹரம் பண்டிகைக்கு ஜூலை 7-ம் தேதி அரசு விடுமுறை என்ற தகவல் சில நாள்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை, 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறதே என மகிழ்ந்தனர். ஆனால் மொஹரம் பண்டிகை ஜூலை 6-ல் கொண்டாடப்படுகிறது. அதில் மாற்றமில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானது என தமிழக அரசின் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 7-க்கு லீவு இல்லை.