News March 15, 2025

சேலத்தில் புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி!

image

சேலத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளநிலை பொறியாளர்களுக்கு, புத்தாக்கப் பொறியாளர் பயிற்சி வழங்கப்படும். தங்கி பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கான கால அளவு 18 வாரம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும். இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com இணையத்தில் பதிவுச் செய்துக் கொள்ளலாம்.

Similar News

News September 13, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.13) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News September 13, 2025

சேலம்: சிசிடிவி கேமராக்கள் மூன்றாவது கண்!

image

சேலம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் அனைவருக்கும் உதவியாக உள்ளது. தெருக்கள், கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குற்றத்தடுப்பிலும், குற்றங்களை கண்டறிவதிலும் உற்ற நண்பனாய் விளங்கும் சிசிடிவி கேமிராக்களை நிறுவி பாதுகாப்பை மேம்படுத்துவோம்.

News September 13, 2025

சேலம்: 1,05,509 மனுக்கள் வழங்கல்!

image

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 15ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்கியது. மேலும் இதுவரை பல பகுதிகளில் நடத்தப்பட்ட முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் அரசின் சலுகைகளை கேட்டு மனு வழங்கி வந்தனர். அதன்படி செப்டம்பர் 12ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் மட்டும் கலைஞர் உரிமைத் தொகை கேட்டு 1,05,509 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!