News March 31, 2024
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தற்காலிகமாக விலகினார்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இன்றிரவு குடலிறக்க அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ளது. நேற்று அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து நெதன்யாகு தற்காலிகமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, பிரதமர் பொறுப்பை துணை பிரதமரான யாரிவ் லெவின் கூடுதலாக கவனிப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
அன்புமணி ஒரு RSS அடிமை: காந்திமதி

திமுக கைக்கூலி என தங்களை விமர்சிப்பவர்கள் RSS அடிமைகளாக உள்ளனர் என அன்புமணியை காந்திமதி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேநேரம், 25 MLA-க்களோடு சட்டப்பேரவையில் நுழைவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். இதன்மூலம், ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணையலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஏற்கெனவே, தன் பேச்சை கேட்காமல் பாஜகவுடன் அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டார் என ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
News December 29, 2025
FLASH: மீண்டும் சிறைக்கு செல்லும் குல்தீப் சிங் செங்கார்

2017 உன்னாவ் பாலியல் வழக்கில் கைதான பாஜக Ex MLA குல்தீப் செங்காரின் ஆயுள் தண்ட னையை டெல்லி HC நிறுத்திவைத்தது. இதற்கு எதிராக CBI தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், HC-ன் உத்தரவுக்கு SC இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் சிறைக்கு செல்ல உள்ளார்.
News December 29, 2025
NLC-ல் 575 பணியிடங்கள்.. தேர்வு இல்லாமல் சூப்பர் வாய்ப்பு!

NLC-ல் 575 அப்ரண்டீஸ் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: B.E., Diplomo. தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹12,524 – ₹15,028. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <


