News March 15, 2025
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம்

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 4 ஆண்டுகளில் 10,187 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2025–26ல் மேலும் 2,338 ஊராட்சிகளில் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் 9.36 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2025
அடிபணிய மாட்டோம்: கர்ஜிக்கும் புதிய பிரதமர்

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி, அமெரிக்காவின் பகுதியாக கனடா ஒருபோதும் மாறாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். டிரம்ப்புடனான மோதல், வர்த்தக போர்ச் சூழல் என கனடாவின் இக்கட்டான காலகட்டத்தில் பதவியேற்றுள்ள கார்னி, நாட்டின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார். நிச்சயமற்ற பொருளாதார நிலை, விரைவில் தேர்தல் என்ற சூழலில், கார்னியின் தலைமைக்கு இது ஒரு சவால்.
News March 16, 2025
கரப்பான் பூச்சியை ஒழிக்க…

கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது கரப்பான்பூச்சி. இதை ஒழிக்க ஒரு முட்டை வெள்ளைக் கருவில் 2 ஸ்பூன் போரிக் ஆசிட் பவுடர், 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை கரப்பான்பூச்சி வரும் இடங்கள், அட்டைப் பெட்டிகள், மூலைகளில் வைத்தால் கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக நீங்கும்.
News March 16, 2025
ராசி பலன்கள் (16.03.2025)

➤மேஷம் – ஜெயம் ➤ரிஷபம் – பாராட்டு ➤மிதுனம் – சலனம் ➤கடகம் – நிம்மதி ➤ சிம்மம் – அன்பு ➤கன்னி – தடங்கல் ➤துலாம் – ஆதாயம் ➤விருச்சிகம் – அமைதி ➤தனுசு – செலவு ➤மகரம் – பெருமை ➤கும்பம் – பரிசு ➤மீனம் – களிப்பு.