News March 31, 2024
அதிரடி காட்டும் தோனி

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி அதிரடி காட்டி வருகிறார். முதல் 2 போட்டிகளில் களமிறங்காத தோனி, இன்றைய போட்டியில் களமிறங்கி பவுண்டரி, சிக்சர் என விளாசி வருகிறார். இக்கட்டான சூழலில் இருக்கும் சென்னை அணியின் ஒரே நம்பிக்கை தோனி தான் என்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தோல்வி விளிம்பில் இருக்கும் சென்னை அணியை தோனி மீட்பாரா?
Similar News
News December 31, 2025
குமரி: கதவை உடைத்து 16 பவுன் நகை திருட்டு

பார்வதிபுரத்தை சேர்ந்த அல்ஜின்டேனி(35) ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரும், இவரது மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரள மாநிலம் சென்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 16 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News December 31, 2025
அமித் ஷாவின் தமிழக வருகையில் மாற்றம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜன.4ம் தேதியே தமிழ்நாட்டிற்கு வருகிறார். திருச்சி மற்றும் புதுக்கோட்டைக்கு 2 நாள் பயணமாக வரும் ஜனவரி 9,10-ம் தேதிகளில் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கு முன்னதாகவே வரும் 4,5-ம் தேதிகளில் அவர் தமிழகத்திற்கு வருகிறார். அப்போது நயினார் நாகேந்திரனின் பிரச்சார இறுதி நிகழ்ச்சி மற்றும் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் உள்ளார்.
News December 31, 2025
தமிழ் பாடகி காலமானார்.. உருக்கமாக இரங்கல்

பருத்திவீரன் பட பாடகி லட்சுமி அம்மாள் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். பல நாட்டுப்புற பாடல்கள் பாடிய அவர், திரைத்துறையிலும் புகழ்பெற்றவராக இருந்தார். நமது சென்னை சங்கமம் கலைவிழாவிலும் பங்கேற்று பாடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆழ்த்த இரங்கல் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


