News March 15, 2025
இந்திய அணியின் திறமைக்கு கிடைத்த பரிசு: மெக்ராத்

இந்திய அணி நியாயமற்ற முறையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதாக, தான் நினைக்கவில்லை என ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத் கூறியுள்ளார். இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல முடியாத காரணத்தால் துபாயில் விளையாடியதாகவும், ஆனால், இந்தியா உள்நாட்டில் விளையாடியதை போல் சிலர் கூறுவதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் அனுபவத்தால் இந்திய அணி மிகச் சிறப்பாக ODI-யில் விளையாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 16, 2025
அடிபணிய மாட்டோம்: கர்ஜிக்கும் புதிய பிரதமர்

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி, அமெரிக்காவின் பகுதியாக கனடா ஒருபோதும் மாறாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். டிரம்ப்புடனான மோதல், வர்த்தக போர்ச் சூழல் என கனடாவின் இக்கட்டான காலகட்டத்தில் பதவியேற்றுள்ள கார்னி, நாட்டின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார். நிச்சயமற்ற பொருளாதார நிலை, விரைவில் தேர்தல் என்ற சூழலில், கார்னியின் தலைமைக்கு இது ஒரு சவால்.
News March 16, 2025
கரப்பான் பூச்சியை ஒழிக்க…

கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது கரப்பான்பூச்சி. இதை ஒழிக்க ஒரு முட்டை வெள்ளைக் கருவில் 2 ஸ்பூன் போரிக் ஆசிட் பவுடர், 2 ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை கரப்பான்பூச்சி வரும் இடங்கள், அட்டைப் பெட்டிகள், மூலைகளில் வைத்தால் கரப்பான் பூச்சி தொல்லை முழுமையாக நீங்கும்.
News March 16, 2025
ராசி பலன்கள் (16.03.2025)

➤மேஷம் – ஜெயம் ➤ரிஷபம் – பாராட்டு ➤மிதுனம் – சலனம் ➤கடகம் – நிம்மதி ➤ சிம்மம் – அன்பு ➤கன்னி – தடங்கல் ➤துலாம் – ஆதாயம் ➤விருச்சிகம் – அமைதி ➤தனுசு – செலவு ➤மகரம் – பெருமை ➤கும்பம் – பரிசு ➤மீனம் – களிப்பு.