News March 15, 2025

ஏப்.30ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்

image

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் தலைமை தோ்தல் ஆணையராக ஞானேஷ்குமாா் பொறுப்பேற்றுள்ளாா். இவரது தலைமையில் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோ்தல் அலுவலா்களிடம் தீா்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கருத்துருக்களையும், ஆலோசனைகளையும் வரும் ஏப்.30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 16, 2025

படப்பை குணா 5 வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

image

படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இதனையடுத்து படப்பை குணாவும் கடந்தாண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.சி அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் படப்பை குணா மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. படப்பை குணா தற்போது 5வது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

மின்னணு தொழிற்சாலைகள்: மத்திய அமைச்சர்

image

திருவள்ளூரில் நேற்று (மார்.15) நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று பேசினார். அப்போது, “நாடு முழுவதும் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் ரூ.1,112 கோடி மதிப்பில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன” என்றார்.

News March 16, 2025

காஞ்சிபுரத்தில் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’

image

தமிழகத்தில், ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கடந்த ஆண்டு காஞ்சிபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே 8 இடங்களில் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

error: Content is protected !!