News March 15, 2025
40 வயதிற்கு மேல் கண் பரிசோதனை அவசியம் – கலெக்டர்

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2024ஆம் ஆண்டு 443 பேருக்கு கண் நீர் அழுத்த நோய் கண்டறியப்பட்டு 392 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டு, 22 நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சையும், 30 பேருக்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. குமரி அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அழகு மீனா நேற்று(மார்ச் 14) தெரிவித்துள்ளார். SHARE IT.
Similar News
News September 15, 2025
குமரி: குழந்தையை கொன்ற தாய்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சம்பக்குளத்தில் கடந்த 11-ம் தேதி பச்சிளம் குழந்தை சடலமாக தலை இல்லாமல் மிதந்து வந்த வழக்கில், பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயான ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா (38) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
News September 15, 2025
குமரியில் ரப்பர் விலை சரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இந்த ஆண்டு கிலோ 200 ரூபாய்க்கு மேல் ரப்பர் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில் ரப்பர் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிலோ 4 ரூபாய் வரை ரப்பர் விலை குறைந்துள்ளது. இது ரப்பர் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது
News September 15, 2025
குமரி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

குமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <