News March 15, 2025
IS அமைப்பின் முக்கியத் தலைவரை காலி செய்த ஈராக்

ஈராக் மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டாக நடத்திய தாக்குதலில், ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு கதீஜா கொல்லப்பட்டார். உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஈராக் மற்றும் சிரியா தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடர்வதாக ஈராக் பிரதமர் முகமது சூடானி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 15, 2025
WPL Final: டெல்லி அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

WPL ஃபைனலில் மும்பை, டெல்லி அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சரிந்தன. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 149 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி தரப்பில் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எந்த அணி வெல்லும்? கமெண்ட்ல சொல்லுங்க
News March 15, 2025
உணவுப்பொருட்கள் வாங்கும் முன்… இதை கவனிங்க

உணவுப்பொருட்களை வாங்கும் முன் expiry date தொடங்கி தரச்சான்று வரை கவனிக்கவும். நிறமூட்டிகள், சர்க்கரை, பதனிடும் பொருட்களின் பயன்பாடு ஆகியன குறித்தும் கவனிக்க வேண்டியது அவசியம். பொதுவான உணவுப் பொருட்களுக்கு FSSAI தரச்சான்றும், நெய் எனில் அக்மார்க் முத்திரையும், பால், குடிநீருக்கு ISI முத்திரையும் இருக்கிறதா எனப் பாருங்கள். பொருட்களை எந்த வெப்ப நிலையில் வைக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
News March 15, 2025
பாப் பாடகர் ஸ்டெட்மென் பியர்சன் காலமானார்

பிரிட்டனைச் சேர்ந்த பாப் பாடகர் ஸ்டெட்மென் பியர்சன் (60) காலமானார். பிரிட்டனைச் சேர்ந்த மிகவும் பழமையான பாப் பாடல் குழு FIVE STAR ஆகும். இதில் ஒரு அங்கமாக விளங்கிய பியர்சன், கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பியர்சன் மறைவுக்கு அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.