News March 15, 2025
காஞ்சிபுரம்: வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு

காஞ்சிபுரம், ஏனாத்தூர் அமைந்துள்ள சங்கர பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற மார்ச் 15 சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்த உள்ளனர். வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும்.
Similar News
News March 16, 2025
மின்னணு தொழிற்சாலைகள்: மத்திய அமைச்சர்

திருவள்ளூரில் நேற்று (மார்.15) நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று பேசினார். அப்போது, “நாடு முழுவதும் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் ரூ.1,112 கோடி மதிப்பில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன” என்றார்.
News March 16, 2025
காஞ்சிபுரத்தில் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’

தமிழகத்தில், ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கடந்த ஆண்டு காஞ்சிபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே 8 இடங்களில் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
News March 16, 2025
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <