News March 15, 2025
சேலம்: பெண் குழந்தைகளுக்கு கை கொடுக்கும் திட்டம்

சேலம், அஞ்சல் அலுவலகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250 முதல் 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். உங்களிடம் பணம் இருக்கும் போது டெபாசிட் செய்யலாம். இதற்கு 8% வட்டி வழங்கப்படுகிறது . இது உங்களின் பெண் குழந்தைகளின் கல்வி, திருமனம் போன்றவைகளுக்கு பயனுள்ளதாக அமையும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News September 13, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்!

சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களைக் குறைக்கும் வகையில் சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், போக்குவரத்து சாலை விதிகளையும், டிராபிக் சிக்னல்களையும் வாகன ஓட்டிகள் மதிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 13, 2025
சேலத்தில் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதையொட்டி வருகை மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று (செப்.12) அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News September 13, 2025
சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு!

ரயில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சேலம் வழியாக மைசூரு- திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை (06239/06240) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வரும் செப்.15 முதல் நவ.25 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படுகின்றன.