News March 15, 2025
உழவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா!

ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள 100 முன்னோடி விவசாயிகள், அந்நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அங்குள்ள தொழில்நுட்பங்களை கண்டுணர்ந்து, தங்களது வயல்களில் அமல்படுத்த ஏதுவாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ₹2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2025
குழந்தையை கைவிடுவோருக்கு என்ன தண்டனை தெரியுமா?

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இதை தட்டிக்கழித்து, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு என்ன தண்டனை என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு குறைந்தது 7 வருட சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
News March 15, 2025
43 நாட்டு மக்களுக்கு அமெரிக்கா தடை: ஏன் தெரியுமா?

தேச பாதுகாப்பை வலுப்படுத்த, 43 நாடுகளின் பயணிகளுக்கு தடை (அ) கட்டுப்பாடுகள் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதில் ஆப்கன், கியூபா, ஈரான், லிபியா, வடகொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுவேலா, யேமன் அடங்கிய ‘red list’ நாடுகளின் மக்களுக்கு முழுத் தடையும், ரஷ்யா, பாக்., பெலாரஸ் உள்பட 2-ம் பட்டியல் நாட்டு பயணியருக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். இந்தியர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது.
News March 15, 2025
இரண்டு வானம்… வெற்றிக் கூட்டணியில் 3வது படம்!

இருவேறு ஜானர்களில் முண்டாசுப் பட்டி, ராட்சசன் என அசத்தலான ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார். 2 படத்திலும் நடித்த விஷ்ணு விஷாலே, அவரது 3வது படத்திலும் கதாநாயகன். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு, இரண்டு வானம் என பெயரிடப்பட்டு வித்தியாசமான முறையில் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதில், கதாநாயகியாக பிரேமலு பட புகழ் மமிதா பைஜு நடிக்கிறார்.