News March 15, 2025
அதிக விளைச்சலைக் காட்டும் விவசாயிகளுக்கு பரிசு!

அதிக விளைச்சலைக் காட்டும் 3 விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக ₹2.50 லட்சம், 2வது பரிசாக ₹1.50 லட்சம், 3வது பரிசாக ₹1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 60% முதல் 70% ஆக உயர்த்தப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 15, 2025
செல்போனில் தலாக்… வசமாக சிக்கிய கணவர்!

இஸ்லாமில் விவாகரத்து செய்ய முத்தலாக் முறை உள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவந்த மத்திய அரசு, தலாக் கூறி பெண்ணை பிரிவது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது. இந்நிலையில், கேரளாவில் செல்போனில் தலாக் கூறிய கணவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஷாகுல் ஹமீது வரதட்சணை கேட்டு உடல், மன ரீதியில் தொல்லை கொடுத்ததாகவும், செல்போனில் தலாக் கூறியதாகவும் மனைவி அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News March 15, 2025
தங்கத்தை விட அதிகமாக உயரும் விலை

சர்வதேச சந்தையில் தாமிரத்தின் விலை தங்கத்தை விட வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு அவுன்ஸ் தாமிரம் (காப்பர்) நான்கு டாலருக்கு விற்பனையான நிலையில், வெறும் 3 மாதங்களில் அது ஐந்து டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 25% உயர்வு. இதனுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை கடந்த 3 மாதங்களில் 20% மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் காப்பரின் பக்கம் திரும்பியுள்ளது.
News March 15, 2025
சபாநாயகரை சந்தித்தது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக EX அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இபிஎஸ்சுடன் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் நடந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தொகுதி பிரச்னை தொடர்பாக அப்பாவுவை சந்தித்ததாகவும், சபாநாயகரை எம்எல்ஏக்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றார்.