News March 15, 2025

பாஜகவின் எண்ணம் ஈடேறாது: ப.சிதம்பரம்

image

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதை போல், பாஜகவும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர விரும்புவதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். ஆசைப்படுவதில் தவறில்லை, ஆனால் பாஜகவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவின் வாக்கு வங்கி எத்தனை சதவீதம் உயர்கிறது என்பதை விட, எத்தனை இடங்களில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 15, 2025

அருமையான வேளாண் பட்ஜெட்: முதல்வர் வாழ்த்து

image

இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 1000 உழவர் நல சேவை மையங்கள், மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் என பல முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பில் வேளாண் பட்ஜெட்டை வடிவமைத்த அமைச்சர், அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

News March 15, 2025

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு

image

பாலிடெக்னிக் படிப்பில் இறுதியாண்டு முடித்தும் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள <>இங்கே க்ளிக் பண்ணுங்க<<>>. வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெறுங்கள் மாணவர்களே…

News March 15, 2025

ரயில்வே தேர்வு எழுத தெலங்கானாவில் மையம்

image

தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வில் தமிழக தேர்வர்கள் 90% பேருக்கு தெலங்கானாவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 493 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத் தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வு மையங்கள் 1000 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!