News March 15, 2025
ஹோலியில் வண்ணங்களால் ஜொலித்த நடிகைகள்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு திரைப்பிரபலங்கள் ஹோலி பண்டிகையை தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். நடிகைகள் ராசி கண்ணா, ஸ்ரீலீலா, பிரியங்கா சோப்ரா, தமன்னா, அதிதி மிஸ்திரி உள்ளிட்ட பலர் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த புகைப்படங்களை மேலே காணலாம். நீங்க ஹோலியை கொண்டாடுனீங்களா?
Similar News
News March 15, 2025
தோனி அல்ல… IPL-ல் அதிக வருவாய் ஈட்டியது இவர்தான்!

பணம் கொழிக்கும் விளையாட்டுத் தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த மொத்த ஐபிஎல் தொடர்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டியது ரோகித் சர்மா தான். அவர் மொத்தமாக ரூ.178.6 கோடியை ஐபிஎல் மூலம் சம்பாதித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில்தான் தோனி இருக்கிறார். ரூ.176.8 கோடி வருவாய் அவருக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி, ரூ.173.2 கோடி சம்பாதித்துள்ளார்.
News March 15, 2025
அருமையான வேளாண் பட்ஜெட்: முதல்வர் வாழ்த்து

இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, 1000 உழவர் நல சேவை மையங்கள், மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் என பல முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பில் வேளாண் பட்ஜெட்டை வடிவமைத்த அமைச்சர், அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
News March 15, 2025
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு

பாலிடெக்னிக் படிப்பில் இறுதியாண்டு முடித்தும் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள <