News March 15, 2025
திருப்பூர் அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மார்ச் 29ஆம் தேதி காலை 10.30 மணி முதல், பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2025
தமிழகத்தில் திருப்பூர் முதலிடம் பெற்று சாதனை!

2024 -ம் ஆண்டின் உலக காற்றுத் தர அறிக்கையில், IQAir நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், குறைந்த காற்று மாசுபட்ட நகரங்களில் திருப்பூர் இடம் பெற்று தமிழ்நாட்டிலேயே திருப்பூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் திருப்பூர் தெற்கு ஆசியாவில் 15- வது இடமும், இந்தியாவில் 3-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இச்சாதனைக்கு ‘வனத்துக்குள் திருப்பூர்’ பங்கு முக்கியமானது குறிப்பிடதக்கது.
News March 15, 2025
திருப்பூர் அருகே கொலை: வாக்குமூலம்

அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி(85).விவசாயி. இவரது மனைவி பர்வதம் (75). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.கொலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ் வழக்கில் உறவினரான ரமேஷ் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் கொலை செய்ததாக தெரிவித்தார்.
News March 15, 2025
10ம் வகுப்பு பொதுத்தேர்வு; தயாராகும் கல்வித்துறை

திருப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 30,235 மாணவர்கள், 1,097 தனித்தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். 108 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1,780 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட் www.dge.tn.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்திலோ அல்லது ஒரு நாள் முன்பே பெறலாம்.