News March 15, 2025
சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்.. 4 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஹோலி கொண்டாட்டம் முடிந்து, ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களான அவர்கள் ஆற்றில் குளித்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டதால் இந்த துயர சம்பவம் நேரிட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 4 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டன.
Similar News
News March 15, 2025
பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி!

இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் சினிமாக்களை மட்டும் இந்தியில் டப் செய்யலாமா? என பவன் கல்யாண் கேட்ட கேள்விக்கு, கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். மொழித் தடைகளை கடந்து திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் தங்களுக்கு உதவுவதாக கனிமொழி தெரிவித்தார். மேலும், பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன் ‘GO BACK HINDI’ என பவன் கல்யாண் போட்ட பதிவையும், தனது பதிலடிக்கு கீழே கனிமொழி பகிர்ந்துள்ளார்.
News March 15, 2025
ரயில் கடத்தல்: இந்தியா மீது பாக். மீண்டும் குற்றச்சாட்டு

பயணிகளுடன் ரயிலை பலுசிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய சம்பவத்திற்கு இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான IS, பலுசிஸ்தான் மாகாண அரசு ஆகியவை ரயில் கடத்தல் மற்றும் பிற தீவிரவாத சம்பவங்களுக்கு இந்திய உளவு அமைப்பு ‘ரா’ நிதி உதவி செய்து, திட்டம்தீட்டி கொடுத்ததாக சாடியுள்ளன. ஏற்கெனவே இதே குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்வைத்தபோது, இந்தியா மறுத்திருந்தது.
News March 15, 2025
தோனி அல்ல… IPL-ல் அதிக வருவாய் ஈட்டியது இவர்தான்!

பணம் கொழிக்கும் விளையாட்டுத் தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த மொத்த ஐபிஎல் தொடர்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டியது ரோகித் சர்மா தான். அவர் மொத்தமாக ரூ.178.6 கோடியை ஐபிஎல் மூலம் சம்பாதித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில்தான் தோனி இருக்கிறார். ரூ.176.8 கோடி வருவாய் அவருக்கு கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி, ரூ.173.2 கோடி சம்பாதித்துள்ளார்.