News March 15, 2025

குழந்தைகள் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

கோவை மாவட்டத்தில் மார்ச்.17 முதல் 22 வரை குழந்தைகளுக்கான வைட்டமின் ‘ஏ’ திரவம் இலவசமாக வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த திரவம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் 6 மாத முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும். இந்நிகழ்ச்சி அரசு மருத்துவமனைகள் தற்காலிக முகாம்களில் நடைபெறும். குழந்தை வைத்திருப்பவர்களுக்கு ”SHARE” பண்ணுங்க

Similar News

News March 16, 2025

கோவை: ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதை மற்ற இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

சொத்து வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்

image

கோவை மாநகராட்சியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை, சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ரூ.473.77 கோடி வசூலிக்க வேண்டும். நேற்று வரை, ரூ.398.20 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ.75.57 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகையை வசூலிக்க மாநகராட்சியில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் வரியை செலுத்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.

News March 16, 2025

கோவையில் பாலியல் தொழில்!

image

கோவை சுந்தராபுரம் பகுதியில், அழகிகளை வைத்து, பாலியல் தொழில் நடைபெறுவதாக சுந்தராபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில், தகவல் கிடைத்த இடத்தில், காவல்துறையினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, ராஜிவ் (30), மும்தாஜ் (38), ஜெய் ஸ்ரீ (23), துர்கா (19) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!