News March 15, 2025
ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி

காரமடையை அடுத்துள்ள பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது மகன் லோகேஷ்(16). இவர் தனது உறவினர்களுடன் நேற்றிரவு காரமடை கோவில் தேர்த்திருவிழாவிற்கு வந்துள்ளார். பின், மீண்டும் உறவினர்களுடன் இன்று அதிகாலை ஆட்டோவில் வீடு திரும்பும் போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் மூவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 15, 2025
மெட்ரோ ரயில் சேவை: மக்கள் மகிழ்ச்சி

சட்டசபையில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோவை மாநகரில் அவினாசி சாலை – சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் ரூ.10.740 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணி தொடங்கப்படும் என்றார். இந்த அறிவிப்பால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 15, 2025
பள்ளி விழாவில் பங்கேற்கும் மயில்சாமி அண்ணாதுரை

நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா வரும் 19ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், சந்திரயான் -1 திட்ட இயக்குநர்.மயில்சாமி அண்ணாதுரை,கலந்து கொண்டு சிறப்புரை வழங்க உள்ளார். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் தங்கராசு, உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
News March 15, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச்.16ல் ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் ஆகியவை போத்தனூா்- இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் தற்காலிக நிலையமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.