News March 15, 2025
இபிஎஸ்-ஐ தவிர்க்கும் செங்கோட்டையன்

நேற்று பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் EPS, சட்டசபை வளாகத்தில் அதிமுக MLAக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் EPS-ஐ சந்திப்பதை அவர் தவிர்த்துள்ளார். அண்மையில் விழா ஒன்றில், MGR, ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அன்று முதல் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
Similar News
News March 15, 2025
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களுக்கும், ஏற்கெனவே முதல்வர் கூறியதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
5.5 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10% பேருக்கு கூட வேலை வழங்கவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
News March 15, 2025
பொய்யும் புரட்டுமான பட்ஜெட்: அண்ணாமலை

வேளாண் பட்ஜெட்டை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என பட்ஜெட்டில் கூறப்பட்டதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முன்னதாக இதை நாங்கள் கூறிய போது அமைச்சர் பெரியகருப்பன் ஏற்க மறுத்ததாக விமர்சித்தார். மேலும், நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற வாக்குறுதிகள் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
News March 15, 2025
உழவர் சந்தைகளில் இருந்து காய்கறிகள் டோர் டெலிவரி

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைந்து இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும். மேலும், இது நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள், சிறு,குறு வணிகர்களும் நேரடியாகப் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?