News March 15, 2025

இன்றைய பொன்மொழிகள்!

image

▶ கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது. ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீ தாங்கித் தாங்கி வலுவைப் பெறு. ▶போட்டியும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே. ▶விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது கேடு – பேரறிஞர் அண்ணா.

Similar News

News March 15, 2025

வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு….

image

வேளாண் பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கான அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இ-வாடகை செயலி மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 130 வேளாண் வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

News March 15, 2025

உழவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா!

image

ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள 100 முன்னோடி விவசாயிகள், அந்நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அங்குள்ள தொழில்நுட்பங்களை கண்டுணர்ந்து, தங்களது வயல்களில் அமல்படுத்த ஏதுவாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ₹2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

நத்தம் புளி, நல்லூர் வரகுக்கு புவிசார் குறியீடு

image

நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா, வேதாரண்யம் முல்லை, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுவரை 35 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!