News March 15, 2025
IMLT20: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இலங்கைக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 179 ரன்கள் குவித்தது. சேஸிங்கில் குணரத்னே (66) போராடினாலும், இலங்கை 173 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
Similar News
News March 15, 2025
தவெக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார்

TVKவில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் தென் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை அங்கீகரிக்கும் வகையில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சென்னையில், வரும் 28ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது உயிர் பிரிந்தது. #RIP
News March 15, 2025
IS அமைப்பின் முக்கியத் தலைவரை காலி செய்த ஈராக்

ஈராக் மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டாக நடத்திய தாக்குதலில், ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு கதீஜா கொல்லப்பட்டார். உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஈராக் மற்றும் சிரியா தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடர்வதாக ஈராக் பிரதமர் முகமது சூடானி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
News March 15, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரவு வைக்கப்பட்டது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 19ஆவது தவணை சற்று முன்பு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என நேற்று பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உங்கள் வங்கிக் கணக்கில் ₹1,000 வந்துவிட்டதா? கமெண்ட்ல சொல்லுங்க.