News March 15, 2025
4 தனித்துவமான இயக்குநர்கள்: அஸ்வத் நெகிழ்ச்சி

வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த 4 தனித்துவமான இயக்குநர்களை இயக்கியது மறக்க முடியாதது என இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ந்துள்ளார். ‘டிராகன்’ படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த போட்டோவை பகிர்ந்த அவர், நினைவில் கொள்ளவேண்டிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், இயக்குநர்கள் KS ரவிக்குமார், கெளதம் மேனன், மிஸ்கின், பிரதீப் ஆகியோர் உடன் அஸ்வத்தும் இருக்கிறார். இதில் உங்களுக்கு பிடித்த இயக்குநர் யார்?.
Similar News
News March 15, 2025
மனைவியின் ஆபாச சேட்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஆண் நண்பருடன் மனைவி ஆபாச Chat செய்வதை ஒரு கணவனால் எப்படி சகித்துக் கொள்ள முடியும் என ம.பி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கணவருடனான செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆண் நண்பரிடம் பகிர்வது, மனைவி மன ரீதியாக கொடுக்கும் கொடுமை என்றே கருத முடியும் எனவும் தெரிவித்துள்ளது. கணவர்தான் தனது மொபைலை ஹேக் செய்தது, ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக மனைவியின் குற்றச்சாட்டையும் நிராகரித்து டைவர்ஸ் வழங்கியுள்ளது.
News March 15, 2025
CT வெற்றிக்கு மூவரே காரணம்: ரிக்கி பாண்டிங்

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் 3 ஆல் ரவுண்டர்கள்தான் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஹர்திக், அக்ஷர், ஜடேஜா போன்ற திறன்மிக்க மூவர் அணியில் இருந்ததால்தான் இந்தியாவுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் கூறியுள்ளார். போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற குறை, வெளியில் தெரியவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 15, 2025
போர் நிறுத்தம்: PM மோடிக்கு நன்றி கூறிய புதின்

போர் நிறுத்தம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், இந்த உன்னத பணிக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுடனான மோதலை நிறுத்த தீவிர கவனம் செலுத்தியதற்காக டிரம்பிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர, புதினிடம் பிரதமர் மோடி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.