News March 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News April 7, 2026
காங்., வேட்பாளருக்கு எதிராக காங்., நிர்வாகி போட்டி

ஒவ்வொரு கட்சியும் வெயில், மழை என்று பாராமல் தேர்தல் பணி செய்து வரும் நிலையில், காங்கிரஸில் உள்கட்சி பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை என கூறப்படுகிறது. நாங்குநேரி காங்., வேட்பாளரான ரூபி மனோகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் மகளிரணி ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான தனிதங்கம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
News April 7, 2026
நாய் கடிக்கு தமிழ்நாட்டில் 13 பேர் பலி.. ஷாக் ரிப்போர்ட்!

TN-ல் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து ரேபிஸ் நோயால் 13 பேர் பலியாகியுள்ளனர். பள்ளி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தெருநாய்கள் கடிக்கு ஆளாகி வருகின்றனர். இது நகரங்களை விட கிராமங்களில் அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, கடந்தாண்டு 6,25,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 95 நாள்களில் மட்டும் 2,09,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
News April 7, 2026
பூனம் பாண்டேவின் ஐடியா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக வருவேன் என்பது உள்ளிட்ட பல சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர் பூனம் பாண்டே. இந்நிலையில், சரியோ தவறோ நம்மை பற்றி அனைவரும் பேச வேண்டும், அதற்கேற்ப நாமும் நடந்துகொள்ள வேண்டும் என பூனம் பாண்டே கூறியுள்ளார். இப்படி செய்தால் தான் சினிமாவில் நாம் கவனிக்கப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன.


