News March 15, 2025
கிரேட் சார் நீங்க..

தெலங்கானாவில் 80 வயதான ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் பால் ரெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 1970 முதல் 2004 வரை ஆசிரியராக பணியாற்றிய அவர், தற்போதும் கற்பிப்பதை நிறுத்தவில்லை. அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, கணிதம், ஆங்கிலம் கற்பித்து வருகிறார். தினமும் தனது சொந்த செலவில் 15 கி.மீ பயணித்து, ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்.
Similar News
News March 15, 2025
TNPSC குரூப்-1 மெயின்ஸ் தேர்வு முடிவு வெளியீடு

கடந்தாண்டு டிசம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்ற TNPSC குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களுக்கு இத்தேர்வானது நடத்தப்பட்டது. இதில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ள 193 தேர்வர்களின் பட்டியல் <
News March 15, 2025
வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாகிறது!

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 5ஆவது பட்ஜெட்டாகும். சிறு, குறு விவசாயிகளுக்கான மானியம், கரும்பு மற்றும் முந்திரி விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்பு, பயிர் காப்பீடு, இளைஞர்கள் கால்நடை பண்ணை வைக்க மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2025
இபிஎஸ்-ஐ தவிர்க்கும் செங்கோட்டையன்

நேற்று பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் EPS, சட்டசபை வளாகத்தில் அதிமுக MLAக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் EPS-ஐ சந்திப்பதை அவர் தவிர்த்துள்ளார். அண்மையில் விழா ஒன்றில், MGR, ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அன்று முதல் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.