News March 15, 2025
ராசி பலன்கள் (15.03.2025)

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – சுபம் ➤கடகம் – செலவு ➤ சிம்மம் – பிரீதி ➤கன்னி – போட்டி ➤துலாம் – மேன்மை ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – பயம் ➤மகரம் – நலம் ➤கும்பம் – அன்பு ➤மீனம் – கவலை.
Similar News
News March 15, 2025
வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாகிறது!

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 5ஆவது பட்ஜெட்டாகும். சிறு, குறு விவசாயிகளுக்கான மானியம், கரும்பு மற்றும் முந்திரி விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்பு, பயிர் காப்பீடு, இளைஞர்கள் கால்நடை பண்ணை வைக்க மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2025
இபிஎஸ்-ஐ தவிர்க்கும் செங்கோட்டையன்

நேற்று பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் EPS, சட்டசபை வளாகத்தில் அதிமுக MLAக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் EPS-ஐ சந்திப்பதை அவர் தவிர்த்துள்ளார். அண்மையில் விழா ஒன்றில், MGR, ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அன்று முதல் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
News March 15, 2025
வங்கிக் கணக்கில் வருகிறது பணம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ₹1,000 மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அந்தவகையில், இந்த மாதத்திற்கான உதவித்தொகை இன்று காலை 9.30 மணிக்கு மேல் பயனாளிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, நேற்றைய பட்ஜெட்டில் விடுபட்ட பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு நற்செய்தி கூறியுள்ளார்.