News March 15, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர ரோந்து பணி

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 14.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து <>கொள்ள<<>> கிளிக் செய்யவும்.

News March 17, 2025

10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

பர்கூர் அடுத்து மட்டாரபள்ளியை சேர்ந்த வேலன் என்பவரின் மகள் கீர்த்திகாஶ்ரீ (16).இவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தும் பலனளிக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News March 17, 2025

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பத்தலப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மோரணப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள பழைய ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவர் ஹர்ஷித் (12) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஹட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!