News March 15, 2025
கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர்கள் பங்கேற்பு

சேலம் ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது ஆண்டு விழா இன்று (மார்ச் 14) கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர்கள் நரேந்திர பிரசாத் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் தனி நடனம், குழு நடனம், பரதநாட்டியம், குறுநாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Similar News
News March 15, 2025
சேலம் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச் 14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News March 14, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல் துறை தொடர்ந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 14) மாநகரப் பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News March 14, 2025
வெற்றி நாயகனான கூலித் தொழிலாளியின் மகன்

சேலம்: வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த மோ.அஜித். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.தாயும் கூலித் தொழிலாளி. இத்தனை கடின சூழ்நிலைகளையும் கடந்து,அரசு பணி தேர்வுக்கு தன்னம்பிக்கையுடன் படித்து தற்போது வெற்றி பெற்றுள்ளார். இப்பொழுது இளநிலை வருவாய் ஆய்வாளராக குறிஞ்சிப்பாடி, கடலூரில் பணியமர்த்தப்பட்ட சான்றிதழை கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் பெற்றார். இவரை வாழ்த்தலாமே…!?