News March 14, 2025
IPL: பும்ரா இல்லாத MI? ஷாக் தகவல்

காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், IPLல்லின் முதல் சில மேட்ச்களில் பும்ரா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. BCCI மெடிக்கல் டீம் கிளியரன்ஸ் கொடுத்தால் மட்டுமே அவர் வரும் ஏப்ரலில் MI அணிக்கு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. எத்தனை மேட்ச்களில் பும்ரா விளையாடமாட்டார் என்பதும் இன்னும் தெரியவரவில்லை. AUSக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
Similar News
News March 15, 2025
வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு….

வேளாண் பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கான அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இ-வாடகை செயலி மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 130 வேளாண் வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
News March 15, 2025
உழவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா!

ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள 100 முன்னோடி விவசாயிகள், அந்நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அங்குள்ள தொழில்நுட்பங்களை கண்டுணர்ந்து, தங்களது வயல்களில் அமல்படுத்த ஏதுவாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ₹2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 15, 2025
நத்தம் புளி, நல்லூர் வரகுக்கு புவிசார் குறியீடு

நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா, வேதாரண்யம் முல்லை, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுவரை 35 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.