News March 14, 2025
சிபிஐ முன்னாள் இயக்குநர் காலமானார்

மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) முன்னாள் இயக்குநர் ஆர்.சி.சர்மா காலமானார். ஹரியானாவின் 1963 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், பின்னர் மத்திய உள்துறைக்கு மாற்றப்பட்டார். 1997-98 காலகட்டத்தில் சிபிஐயின் இயக்குநராக இருந்தார். இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிய போபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல், சாமியார் சந்திராசாமி தொடர்புடைய வழக்கு உள்ளிட்டவற்றை விசாரித்ததில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
Similar News
News March 23, 2026
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*வாழ்க்கையை கண்டு நீங்கள் பயப்படாவிட்டால், அது மிகவும் அழகானது. *கீழே பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஒருபோதும் வானவில்லைக் காண முடியாது. *கற்பனை, செயல் இல்லாமல் அர்த்தமற்றது. *இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நம் கஷ்டங்கள் கூட. *நீங்கள் உங்களை நம்ப வேண்டும், அதுதான் வாழ்வின் ரகசியம்.

நாங்கள் தாக்கவில்லை: ஈரான்

டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க-பிரிட்டன் ராணுவத் தளத்தின் மீதான ஏவுகணை தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்கியதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியதை அடுத்து, இந்த மறுப்பு வந்துள்ளது. டியாகோ கார்சியா ஈரானிலிருந்து சுமார் 4,000 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னதாக தங்களிடம் 2,000 கி.மீ செல்லும் ஏவுகணை மட்டுமே உள்ளதாக ஈரான் கூறியிருந்தது.