News March 14, 2025

கஷ்டங்களை நீக்கும் வக்ர காளியம்மன்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருவக்கரை கிராமத்தில் வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு ராஜகோபுரத்தை அடுத்து உட்பகுதியில் இடப்பக்கமாக அருள்தரும் வக்கிரகாளிம்மன் சன்னதி உள்ளது. ஜாதகத்தில் வக்ர சனி, வக்ர குருவால் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறவர்கள் திருவக்கரை வக்ர காளியம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News September 14, 2025

விழுப்புரம்: அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை

image

விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், கணிதவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவிகள், கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என, கல்லூரி முதல்வர் தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

News September 14, 2025

விழுப்புரம் மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள், அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இலவச உதவி மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன, உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்படும் மாணவர்கள், 14417 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி தொடர்பான சந்தேகம் உள்ள மாணவர்களும் இந்த எண்ணை தொடர்புக் கொள்ளலாம். அவசியம் SHARE பண்ணுங்க

News September 14, 2025

‘விஜய் பின்னால் இருப்பது கொள்கையில்லா கூட்டம்’

image

தேர்தலில் அளித்த 90% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது. ஆனால், சிலர் அரசியலுக்காக, திமுக ஆட்சியை குறை கூறுகின்றனர் என, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி, விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், “கூட்டம் கூடுவதால் தலைவனாக முடியாது. கொள்கையில்லா கூட்டம் தான், விஜய் பின்னால் கூடுகின்ற கூட்டம்” என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!