News March 14, 2025

மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி காலமானார்

image

மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கிங் அங்கிள், காமினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேவ் முகர்ஜி. இவர், பிரமாஸ்திரா பட இயக்குநர் அயன் முகர்ஜியின் தந்தை. மேலும், ராணி முகர்ஜி, கஜோலின் உறவினர். அவரின் தந்தை சசாதார் முகர்ஜியும் புகழ்பெற்ற தயாரிப்பாளர். தாயார் சதிதேவி முகர்ஜி, புகழ்பெற்ற நடிகர்கள் அசோக் குமார், அனுப் குமார், கிசோர் குமாரின் சகாேதரி ஆவார்.

Similar News

News March 15, 2025

கிரேட் சார் நீங்க..

image

தெலங்கானாவில் 80 வயதான ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் பால் ரெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 1970 முதல் 2004 வரை ஆசிரியராக பணியாற்றிய அவர், தற்போதும் கற்பிப்பதை நிறுத்தவில்லை. அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, கணிதம், ஆங்கிலம் கற்பித்து வருகிறார். தினமும் தனது சொந்த செலவில் 15 கி.மீ பயணித்து, ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்.

News March 15, 2025

கொலை மிரட்டல் வந்தது… வருண் சக்கரவர்த்தி ஷாக் பேட்டி

image

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக செயல்பட்ட அவர், 2021 டி20 உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதை சுட்டிக்காட்டி, தனக்கு இந்தியாவுக்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சிலர் பைக்கில் தன்னை துரத்தியதாகவும் கூறியுள்ளார்.

News March 15, 2025

ராசி பலன்கள் (15.03.2025)

image

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – சுபம் ➤கடகம் – செலவு ➤ சிம்மம் – பிரீதி ➤கன்னி – போட்டி ➤துலாம் – மேன்மை ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – பயம் ➤மகரம் – நலம் ➤கும்பம் – அன்பு ➤மீனம் – கவலை.

error: Content is protected !!