News March 14, 2025

2,562 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!

image

தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். அதன்படி, 2025-26ஆம் ஆண்டில் 1,721 முதுநிலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என, பட்ஜெட் உரையில்
அவர் குறிப்பிட்டார்.

Similar News

News March 14, 2025

இந்த 2 நாள்கள் வங்கிகள் இயங்காது

image

ஒருங்கிணைந்த வங்கிகள் சங்கம் (UFBU) சார்பில், வரும் 24, 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு நாள்களும் வங்கிகள் செயல்படாது. இந்திய வங்கிகள் அசோசியேஷனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், UFBU இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளது. வாரத்திற்கு 5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர்.

News March 14, 2025

PNB வங்கியில் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பிங்க

image

PNB வங்கியில் 350 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆபீசர்-கிரெடிட், ஆபீசர்-இன்டஸ்ட்ரீ, மேனேஜர்-ஐடி, சீனியர் மேனேஜர்-ஐடி, மேனேஜர் -டேட்டா சயின்டிஸ்ட், மேனேஜர்- சைபர் செக்யூரிட்டி, சீனியர் மேனேஜர்- சைபர் செக்யூரிட்டி ஆகியவை அந்த பணியிடங்கள். இதற்கான விண்ணப்பப்பதிவு <>https://ibpsonline.ibps.in/pnbfeb25/<<>> தளத்தில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாளாகும்.

News March 14, 2025

ஹோலியால் சிறுபான்மையினர் அச்சம்: மெஹ்பூபா

image

மதவெறியர்களால் ஹோலி பண்டிகை சிறுபான்மையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பண்டிகையாக மாறியுள்ளதாக முன்னாள் J&K முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களும் இதற்கு துணை போவதாகவும், இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது எனவும் அவர் கூறியுள்ளார். இந்து vs முஸ்லிம் என எதிரெதிராக நிறுத்துவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!