News March 31, 2024
தேசிய போட்டியில் திண்டுக்கல் மாணவன்

பீகார் மாநிலம் பாட்னாவில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம் பள்ளியில் பயிலும் மாணவன் ஜித்தின் அர்ஜுனன் 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல்
ஆகிய 3 போட்டிகளிலும்
பங்குபெற உள்ளார். மாணவனை பள்ளி நிர்வாகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News August 15, 2025
திண்டுக்கல்லில் சொந்த வீடு கட்ட ஆசையா?

திண்டுக்கல்லில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <
News August 15, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், (சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News August 14, 2025
திண்டுக்கல்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<